
இராச இராசனுக்கு 15 மனைவிகள். இந்த 15 பெண்களும் வெவ்வேறு பகுதிகளை, குடிகளை சார்ந்தவர்கள்.
இதனால் தான் சொல்கிறேன் மன்னர்களை பொது அடையாளமாக தான் நாம் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர தனித்த ஒற்றை குடியின் அடையாளமாக சொந்தம் கொண்டாடுவது சரியாக இருக்காது .
ஆகவே தமிழர் இன பேரரசன் என்று பொதுவாக அழைப்பதே அவருக்கும் சிறப்பு நம் இனத்திற்கும் சிறப்பு. ஏனென்றால் உலகமே அவரை தமிழ் மன்னர் என்று தான் அழைக்கிறது.
இராச இராசனின் சிறப்புப் பெயர்களையும் , மனைவியார் பெயர்களையும் தமிழர் குடிகள் தெரிந்து கொண்டாலே புரிதல் ஏற்படும்
இயற்பெயர் – அருண்மொழித்தேவன்
பிறந்தநாள் – 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943 என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு)
இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புப் பெயர்கள் – 42
1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மோழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்
தாய் தந்தையர் – வானவன் மாதேவி சுந்தரசோழன்
உடன் பிறந்தோர் – ஆதித்த கரிகாலன் (அண்ணன்) குந்தவை (அக்கை)
மனைவியர் – 15
1. உலக மகாதேவி – (தந்திசக்தி விடங்கி) பட்டத்தரசி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி – பாண்டிய நாட்டு இளவரசி
9. வானவன் மகாதேவி (திருபுவன மாதேவி. வானதி) – இராசேந்திர சோழனின் தாய்
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயனி.
12. நக்கந்தில்லை அழகியார்
13. காடன் தொங்கியார்
14. இளங்கோன் பிச்சியார்
15. தைலாமாதேவி

மக்கள் – இராசேந்திர சோழன், எறிவலி கங்கைகொ ண்ட சோழன் என்னும் இரு ஆண்மக்களும், மாதேவடிகள், அருமொழி சந்திர மல்லியரான கங்கமாதேவியார், இரண்டாம் குந்தவைஎன்னும் மூன்று பெண்மக்களும் இருந்தனர்
(30 கல்வெட்டுகள். வை.சுந்தரேச வாண்டையார். பக்கம் 29)
அரியனை அமர்ந்தநாள் – ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
ஆட்சி ஏற்ற வயது – 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது – ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
கும்பாபிசேசம் செய்த நாள் – 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் – 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
முதல் திவசம் செய்தது – 6/01/1015 (1015 மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
வாழ்ந்த கால வயது – 71 ஆண்டுகள்
ஆட்சிச் காலம் – 28 ஆண்டுகள் 8 மாதங்கள் 29 நாட்கள்
சோழ கல்வெட்டு செய்திகள்
தமிழகத்தில் சோழர் காலத்தில் தான் ஆயிரகணக்கான கல்வெட்டுகள் கோயிற்சுவர்களில் பொறிக்கப்பட்டன
கல்வெட்டுகளின் அமைப்பு
கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகளைப் பெரும்பாலும் ஐந்து பெரும் பகுதிகளாக பிரித்தனர்
1. கல்வெட்டின் தொடக்கம் அல்லது மங்கலவாசகம்
2. கல்வெட்டு எழுதப்பட்ட காலம்
3. கல்வெட்டுச்செய்தி
4. கையெழுத்து
5. முடிவுரை அல்லது ஓம்படைக்கிளவி
சோழர் கால தொல் சீர் தமிழ் மொழி
சோழராட்சியில் நிர்வாக முறைகளை கோயில் நிருவாகம், ஊரவை நிருவாகம், அரசு நிருவாகம் என் மூன்றாகப் படுத்தினர்.
கோயிலை வழிப்பாட்டிற்குரிய தலமாக மட்டும் கருதாமல், ஊரவை நிருவாகத்தின் செயலகமாகவும் கருதினர்.
கோயிலுள் இருக்கும் மண்டபத்தை திருலோக்கம் எனவும், கோயிலுள் இருக்கும் சபையை மன்று அல்லது அம்பலம் என்றும், அரண்மனையில் உள்ள இராசசபையை உள்ளாலை என்றும், கோயிலிலமைந்த மருத்துவ மனையை ஆதுலர் சாலை என்றும் அழைத்தனர்.
கோயிலில் ஆடுபவர்கள், மற்றும் பாடுபவர்கள் – பதியிலார்
பூசை வழி படைக்கும் பண்டங்கள் – அமுது படி
உணவு – அடிசில்
அரசசபையில் அடங்கிய பெருந்தரத்து அதிகாரிகள் – மன்றாடிகள்
சேனைத் தலைமை ஏற்று நடதிய அதிகாரிகள் – படைமுதலி
காலாட்படையினர் – கைகோளப் பெரும் படை
அமைச்சர்களுக்கு ஒத்த அதிகாரம் படைத்தவர்கள் – உடங்கூட்டம்
மன்னர்களுக்கு நெருங்கிய தொண்டாற்றிய ஆடவர் மற்றும் பெண்டிர் – அணுக்கமார் மற்றும் அணுக்கியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
இராசராசசோழன் காலத்து தஞ்சாவூர் நகர எல்லைகள்
1. கிழக்கு எல்லை – புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்
2. மேற்கு எல்லை – வல்லம் களிமேடு
3. வடக்கு எல்லை – விண்ணாறு (வெண்ணாறு)
4. தெற்கு எல்லை – நாஞ்சிக்கோட்டை தெரு
தஞ்சாவூர் அரண்மனை
தஞ்சாவூர் அரண்மனை முதன் முதலில் மாமன்னன் இராசராசசோழனால் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களாலும் மாரட்டிய மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இப்போது அரண்மனை 534 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே உள்ளது. அரண்மனையில் அரசவை, அந்தப்புரம், மணிமண்டபம், ஆயுதகோபுரம், தர்பார் மண்டபம், சரசுவதிமகால் நூல்நிலையம். சங்கீதமகால், கந்தக கோபுரம்,ஏழடுக்கு மாளிகை, குதிரை, யானை லாயங்கள், சுதை உருவங்களுடன் கூடிய இருட்டறைப் பகுதிகளும் கானப்படுகின்றன
இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.