HistoryTravels

எல்லோரா குகையின் அதிசயங்கள்

வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் ‘Verul Leni’ என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வட‌‌க்கு வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள்.

உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதில் இருவேரு கருத்துகள் இல்லை.

மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவியப் பாடலென்றே கூறவேண்டும்.

தெக்காணப்பாறை படிவு என்று அறியப்படும் மகாராஷிட்ராவின் எரிமலைப் பாறை உருவாக்கங்கள் கொண்டு குகைகள் குடையப்பட்டு பெரும் அதிசயமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாறைப்படிவுகள் உருவாக்கத்தினால் கூரைகள் ஏதோ ‘பிளாட்’ மேற்புறமாக தோற்றம் தருகின்றன.

32ஆம் எண் குகை அருகே எரிமலை குழம்பு ஓடிவந்த பாதைகளை காணமுடியும். இந்தப்பாதைகள் கடுமையான வெப்பத்தினால் சிவப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.

இதுபோன்ற பாறையால் கட்டப்பட்டதே அருகில் உள்ள கிரிஷ்னேஷ்வர் கோயில். மேலும் பீபி-கா மாக்பராவின் நடைபாதை வழித் தரையிலும் இத்தகைய பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குகைகள் குடையப்பட்ட மலைகள் சாயாத்ரி மலைத் தொடரைச் சேர்ந்தவை. இந்த மலைகளுக்கு வயது 65 மில்லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த மலைகள் எழும்பியுள்ளன. இதில் மேற்குப்பகுதி மலைகள்தான் குகைகள் குடையப்பட்டுள்ளது. பல நதிகளுக்கு மூலஸ்தானம் இந்த மலைகள் என்றால் மிகையாகாது. இதில் குறிப்பாக ‘எலகங்கா’ நதி குறிப்பிடத்தகுந்தது. இதுதான் குகை எண் 29 அருகே ஒரு அழகான அருவியாக கீழே விழுகிறது.

எரிமலைக் குழம்பின் தன்மை மற்றும் அதன் கனிமவள அடர்த்தியைப் பொறுத்து எரிமலைப்பாறைகளும் படிவுகளும் பல்வேறு தரப்பட்டு உருவாகியுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close