Agriculture

நாட்டு வாகை மரம் உடனடி நிழல்தரும்

முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும். வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள் வாகை மரத்திலிருந்துதான் மரச்செக்கு செய்யப்படுகிறது; ஆடு, மாடுகளுக்குத் தீவனம்; நிலத்துக்குத் தழையுரம்; வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல்; மண்ணரிப்பைத் தடுக்கிறது; மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைப்பது நலம். வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம் என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.

அல்பிஸியா லெபெக் (Albizia lebbeck) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வாகை; வாகையில் காட்டு வாகை, தூங்குமூஞ்சி வாகை என இரண்டு வகைகள் உண்டு. இதில் தூங்குமூஞ்சி வாகை, நிழலுக்கு மட்டும்தான் பயன்படும். எனவே, . சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி வாகையை நடவு செய்யலாம்.

தீவனம்:
இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது.

தழையுரம்:

உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

ஆடு மற்றும் கோழி மீன் பண்ணைகளுக்கு உடனடியாக நிழல்தரும் புயல் மற்றும் மழை காலங்களில் உறுதியுடன் நிற்கும்
6 அடியிலிருந்து 13 அடி வரை நாட்டு வாகை மரங்கள் 6 to 7 ft /
8 to 9 ft/ 10 to 11 ft

தமிழ்நாட்டின் மரகன்றுகளுக்கான மிகப்பெரிய நர்சரி (மொத்த விலை ) நர்சரி கணேஷ் நர்சரி கார்டன். 40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் ..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில்

உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் உங்களுடைய உழைப்பையும் பணத்தையும் வீணாக்காதீர்கள்

விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து பெறுகிறோம் இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close