
சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது
புங்குடுதீவு வட்டாரம் 9 (வல்லன்) இல் அமைந்துள்ள ஸ்ரீ சண்முகநாதன் கனிஷ்ட மகா வித்தியாலயமானது இயங்காமலும் புனரமைக்கப்படாமலும் இருந்த நிலைமையில் எமது அமைப்பினால் அப்பாடசாலையை சுற்றி அமைந்துள்ள வளாகங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அப்பிரதேச மக்களின் விளையாட்டு திறமையை அதிகரிப்பதற்காக கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் கால்பந்து பயிற்சிகளுக்கான விளையாட்டு மைதானங்கள் தற்காலிகமாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானம் அமைக்கும் பணிகள் பூரணத்துவம் அடையாமல் சிறிதளவு பணிகள் எஞ்சியுள்ள நிலைமை காணப்படுகின்றது. இதற்காக யாரும் முன் வந்து உதவ விரும்பினால் எமது அமைப்பினை தொடர்பு கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.