கூகுள் லென்ஸில் சூப்பரான 3 ஆப்சன் | பேப்பரில் எழுதியதை கணினிக்கு கொண்டுபோகலாம்
கூகுள் லென்ஸ் ஏற்கனவே பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டிருந்தது. நீங்கள் அவற்றை படிக்க விரும்பினால் இந்த கட்டுரையின் இறுதியில் அதை படிக்கலாம். முன்பு ஒருவர் பேப்பரில் எழுதியதை மொபைலில் Copy/Paste செய்திட முடியும். அதனை ஒருவர் கணினிக்கு நேரடியாக கொண்டுவர முடியாது. ஆனால் தற்போது முடியும்.
உதாரணத்திற்கு, நான் ஒரு பேப்பரில் கட்டுரை ஒன்றினை எழுதுகிறேன் என வைத்துக்கொள்வோம். இதனை அச்சு வடிவதற்கு கொண்டு செல்ல மீண்டும் நானோ அல்லது எனது உதவியாளரோ டைப் செய்துதான் கொண்டுவர முடியும். கூகுள் லென்ஸ் ஆப் மூலமாக நான் எழுதிய கட்டுரையை புகைப்படம் எடுத்தால் அதனை எனது மொபைலில் Copy/Paste செய்திட முன்பு முடியும். ஆனால் தற்போது மொபைலில் இருந்து Copy செய்து நேரடியாக எனது கணினியிலேயே Paste செய்திடும் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு நான் இரண்டு விசயங்களை மட்டும் செய்தால் போதுமானது. ஒன்று, கூகுள் லென்ஸ் புரிந்துகொள்ளும் விதமாக நான் எழுத வேண்டும். இரண்டாவது, எனது மொபைலில் இருக்கும் கூகுள் லென்ஸ் ஆப்பிலும் கணினியில் இருக்கும் கூகுள் டாக்குமெண்ட் கணக்கிலும் ஒரே ஜிமெயில் – ஐ signin செய்திருக்க வேண்டும். இப்போது எனது மொபைலில் நான் Copy செய்துவிட்டு கணினியில் இருக்கும் கூகுள் டாக்குமென்டில் Paste என்ற ஆப்சனை கிளிக் செய்தால் நான் மொபைலில் copy செய்தது அங்கே paste ஆகிவிடும்.

மேலும் இரண்டு வசதிகளையும் கூகுள் லென்ஸில் கொடுத்திருக்கிறார்கள். அதில் முதலாவது, ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை கற்றுத்தரும் வசதி [pronounce new words]. இரண்டாவது, ஒரு மாணவர் ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு விசயம் புரியவில்லை எனில் அதுபற்றி கூகுள் லென்ஸ் கொண்டு தேடி விவரங்களை பெற முடியும். இந்த வசதி, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் கிடைக்கும். முதலாவது வசதியானது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.