
வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து சர்வதேச கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாகிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு இன்று (21.01.2020) மாலை வவுனியா நகரசபை மண்டபத்தில் கௌரவம் வழங்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து இலங்கைக்காக விளையாடுவதற்காக ஏழு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய குத்துச்சண்டை அணியுடன் நாளை (22.01) பாகிஸ்தான் நோக்கி பயணமாகவுள்ளனர்.