பளுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவி கௌரவிப்பு!
Miss. N.Thushmythayini Student of Saivapiragasa Ladies College, made a proud moment by won a gold medal in Women’s National Weightlifting Competition in 2019.
She made an achievement By Lifting a 108kg Category
Under 20 years of age.
தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியில்இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
சைவபிரகாசா மகளீர் கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
தேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.