Miss.Rakshitha student of chavakachcheri Hindu college represents by the school and made a new record in Polevault in All island School Athletic meet, held in Sugadadasa Stadium. She achieved the record by 3.35Metre (Under age of 20)
She breaks the previous record made by J.Anita (Thelippalai Majannak College in 2014) by 3.23Metre.
அனித்தாவின் சாதனையை முறியடித்து டக்சிதா புதிய சாதனை!
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா 3.35 மீற்றர் பாய்ந்து புதிய சாதனைப் பதிவு செய்துள்ளதுடன் தங்கப் பதக்கத்தையும் அதே, கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.விசோபிகா 3.10 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
2014ம் ஆண்டு தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.அனித்தாவினால் 3.23 மீற்றர் பாய்ந்தமையே இதுவரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா 3.35 மீற்றர் பாய்ந்து முறியடித்து, புதிய சாதனையைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.