புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 24 வது வருட கோடைக்கால ஒன்றுகூடல்
கடந்த ஆனி மாதம் 30 திகதி புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 24 வது வருட ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் சிறப்புறவே நடைபெற்றன. அங்கு வருகைதந்த எமது அன்பு உறவுகள் பற்பல விளையாட்டுகளிலும் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
2019 ம் ஆண்டு நிகழ்ந்த ஒன்று கூடல் அமரர் கந்தையா கோபாலபிள்ளை நினைவினையொட்டி நிகழ்த்தப்பட்டது.
இவ்வாறு இனி வரும் ஒவ்வொரு வருடங்களும் தங்களது நற்பணிகள் தொடர எமது ETC அமைப்பானது வாழ்த்துவதோடு நன்றியையும் தெரிவிக்கின்றோம்.