AgricultureTech

Robots That Are Invading The Agriculture Industry

விவசாயத்துறையில் கலக்கும் ரோபோக்கள்

களையெடுக்கும் தானியங்கி ரோபோ [Ecorobotix]

களை எடுப்பது என்பது விவசாயத்தில் மிக முக்கியமான கடினமான பணி. வெகுநேரம் கவனத்தோடு குனிந்து களை பறிப்பது என்பது சவாலான காரியமும் கூட. இதற்காக Ecorobotix எனும் நிறுவனத்தின் களையெடுக்கும் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி செயல்படும் இந்த ரோபோ 100% தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் இருக்கும் GPS மற்றும் துல்லியமான கேமராக்கள் களை எது செடி எது என்பதனை வேறுபடுத்திக்காட்டிட உதவுகிறது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் செயலாற்றும் இந்த ரோபோ பெரிய அளவில் மனித பணியாட்களின் தேவையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்மார்ட் போன் மூலமாகவே கூட இந்த ரோபோவை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

பழம் பறிக்கும் ரோபோ [Energid Citrus Picking System]

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை இன்னும் பல பழங்களை பறிப்பதற்காக Energid நிறுவனம் ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவானது பழத்தின் காம்பை மிகச்சரியாக கத்தரித்து பழத்தை பறிக்கிறது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட மிகவும் எளிமையாக பழங்களை பறிக்க முடியும். 2-3 நொடிகளுக்கு ஒரு பழம் வீதம் பறிக்க முடியும் என்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள்.

ஸ்ட்ராபெர்ரி பழம் பறிக்கும் ரோபோ

மிகப்பெரிய பரப்பளவில் விவாசாயம் செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறிப்பது என்பது சவாலான காரியம். அதுவும் சரியான பருவத்தை எட்டிய பழங்களை கண்டறிந்து பறிப்பது அதைவிட சிரமம். ஆனால் அந்த வேலையை மிகத்திறம்பட செய்யக்கூடிய “Agrobot E-Series” வகை ரோபோக்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

கீரையில் களை பிடுங்கும் ரோபோ

ட்ராக்ட்ர் உடன் இணைக்கப்பட்டு செயல்படும் இந்த LettuceBot2  ரோபோவானது கீரை சாகுபடியில் களைகளை மிகச்சரியாக கண்டறிந்து அகற்றிட உதவுகிறது. கிட்டத்தட்ட 90% களைகளை இந்த கருவியைக்கொண்டு மிகக்குறைந்த நேரத்தில் அகற்றிட முடியும்.

பயிர்களை பற்றி அறியும் ரோபோ [PrecisionHawk]

இந்த வீடியோவில் இருப்பதைப்போல பறந்துபட்ட விவசாயப்பரப்பில் உள்ள பயிர்களின் நிலையை கண்காணிப்பதற்கு இந்தக்கவகை ட்ரோன்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் துல்லியமாக பயிர்களின் நிலையை ஆராய்ந்து அவற்றை படம் பிடித்து டிஜிட்டல் தகவல்களாக அனுப்புகின்றன. அவற்றை ஆராய்ந்து என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்த முடியும்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close