
மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் சக்திக்குமார் பிரஜித் கண்டுபிடித்த ஹம்மர் ஹெல்பெர் (Hammer Helper) தாய்வானில் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
பல நாடுகளில் இருந்து மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்பை இங்கு காட்சிப்படுத்தி இருந்தனர். பலத்த போட்டிகளுக்கு மத்தியில் சக்திக்குமார் பிரஜித்தின் கண்டுபிடிப்பு இரண்டாம் இடத்தை சுவீகரித்து கொண்டது.
இதன் மூலம் மாணவன் பிரஜித் தாய்வான் அரசால் வெள்ளிப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டு நாட்டிற்கும் தனது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவனின் இச் சாதனையினை பாராட்டி மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் (EDS) நேரில் அழைத்து பாராட்டி கௌரவம் வழங்கப்பட்டது. மாணவன் சக்திக்குமார் பிரஜித் அவர்களுக்கு கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் எஸ். தேவசிங்கன் அவர்கள் பரிசு வழங்கி கௌரவிப்பதனை படங்களில் காணலாம்.