AwarenessEventsSportsSwitzerland
First Tamil player on Switzerland national football team

தனது திறமைகளால் உச்சம் தொட்ட தமிழர்கள் உலகளாவிய ரீதியில் தமிழுக்கும் தமது நாட்டிற்கு பெருமைசேர்த்த வண்ணமே உள்ளனர்.

அந்தவகையில், பாலறூபன் அஸ்வின் தனது 18ஆவது வயதிலேயே உதைபந்தாட்டம் ஆடுவதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ள முதல் தமிழன் ஆவார்.
உதைபந்தாட்ட வீரரின் மகனான பாலறூபன் அஸ்வின் லுர்சேன் மாநில அணியிலும், 21 வயதுப்பிரிவு சுவிஸ் தேசிய அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.


பாலறூபன் அஸ்வின் தனது முதல் தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அவரது ஒப்பந்தம் 2023 ஜூன் 30 வரை இயங்குகிறது.
எஃப்.சி. லுஸெர்ன் அணியிலிருந்து, சுவிட்சர்லாந்தில் தேசிய ரீதியான போட்டிகளுக்கு விளையாட தகுதி பெற்றிருக்கும் இருவரில் இவரும் ஒருவர். அத்துடன் இந்த போட்டிகளுக்கு தெரிவாகியிருக்கும் முதலாவது ஈழத்தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.