EducationEventsSportsSriLanka
Trending

Theevagaththiruvizha 2020

Story Highlights
  • Thirukkural (திருக்குறள் மனனப்போட்டி)
  • Soccer (கால்பந்தாட்டம்)
  • Athletics (விளையாட்டுப்போட்டி)
  • Event Rules (விதிமுறைகள்)
  • Documents (ஆவணங்கள்)
  • Sponsors (ஆதரவாளர்கள்)

2020 ஆம் ஆண்டின் தீவகத்திருவிழா

ETC அமைப்பானது தீவகங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் மக்களின் சகோதரத்துவத்தை ஒருங்கிணைப்பதற்கும் 2020 ஆம் ஆண்டு தீவகத் திருவிழா என்ற நிகழ்வினை நடத்துவதற்கு முன்வந்துள்ளது.

 

திருக்குறள் மனனப்போட்டி

தீவகப் பாடசாலை மாணவர்கள் நாம் தேர்வுசெய்து கொடுக்கப்படும் குறிப்பிட்ட திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். போட்டியின் விதிமுறைகளுக்கு அடங்கிய வினாத்தாள்களுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும்

போட்டி விதிமுறைகள்

பிரிவு 1 : 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் (2006ஆம் ஆண்டும் அதற்குப்பின்னும் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.)

  • 1 தொடக்கம் 100 வரையுள்ள திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
  • 25 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும்.
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

பிரிவு 2 : 14 வயது – 21 வயது மாணவர்கள் (1998ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள்)

  • 1 தொடக்கம் 300 வரையுள்ள திருக்குறள்கள் மற்றும் அதற்கான பொருள்களையும் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
  • 40 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும்.
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முக்கிய குறிப்பு : அடுத்து வரும் வருடங்களில் போட்டிகளில் பங்ப்பற்றும் மாணவர்களுக்கு திருக்குறள்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். ஆகவே மாணவர்கள் தொடர்ச்சியாக திருக்குறள்களை படித்தவண்ணம் இருப்பார்களேயானால் வரும் வருடங்களில் இலகுவாக போட்டிகளில் வெற்றிபெறலாம்.

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்குறள் எண் : 393

 

கால்பந்தாட்டப்போட்டி

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தீவகத்திருவிழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டியும் ஒழுங்கு செய்ய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள போட்டி விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடத்தப்படும்.

போட்டி விதிமுறைகள்

  • கால்பந்தாட்ட காலணிகள் (SOCCER BOOTS) தவிர்ந்த காலணிகள் பயன்படுத்த முடியாது.
  • போட்டிகள் யாவும் 11 வீரர்களை கொண்டதாக அமையும்.
  • நேரம் 45 – 15 – 45 நிமிடம் கொண்டது
  • அணியின் பெயர்ப்பட்டியலில் 20 வீரர்கள் சேர்த்துக்கொள்ள முடியும்
  • அணியின் பெயர்ப்பட்டியலில் இல்லாத வீரர்கள் போட்டியில் பங்குபற்ற முடியாது
  • ஒரு அணியில் பங்குபற்றுபவர்கள் இன்னொரு அணியில் பங்குபெற முடியாது.
  • அனைத்து வீரர்களும் சீருடை அணிவது கட்டாயமானது.
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

 

மென்பந்து துடுப்பாட்டப்போட்டி

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தீவகத்திருவிழாவை முன்னிட்டு மென்பந்து துடுப்பாட்டப்போட்டியும் ஒழுங்கு செய்ய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள போட்டி விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடத்தப்படும்.

போட்டி விதிமுறைகள்

  • சீருடை மற்றும் காலணிகள் (Jersey & Shoe) கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
  • போட்டிகள் யாவும் 11 வீரர்களை கொண்டதாக அமையும்.
  • அணியின் பெயர்ப்பட்டியலில் 20 வீரர்கள் சேர்த்துக்கொள்ள முடியும்
  • அணியின் பெயர்ப்பட்டியலில் இல்லாத வீரர்கள் போட்டியில் பங்குபற்ற முடியாது
  • ஒரு அணியில் பங்குபற்றுபவர்கள் இன்னொரு அணியில் பங்குபெற முடியாது.
  • போட்டியில் பங்குபற்றுபவர் தீவகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

 

Athletics (விளையாட்டுப்போட்டிகள்)

இன்னும் பல விளையாட்டுகளை உள்ளடக்கவுள்ளோம். சைக்கில் ஓட்டம், மரதன் ஓட்டம் மற்றும் பல விளையாட்டுகள் உள்ளடக்க படும்.

 

2021 ஆம் ஆண்டு முல்லைதீவு, மன்னார் ஆகிய இரு மாவட்டங்கழும் ஏனைய அணிகளுடன் இணைந்து போட்டிகளில் சிறப்பிக்கவுள்ளது.

2020 ஆம் ஆண்டு வலைப்பந்தாட்டம் புதிய விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படும்.

Netball to be introduced as a new sports in 2020.

 
 
 

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close